மனைவியுடன் கள்ளக்காதல்: தட்டிக்கேட்ட போலீஸ் மீது புரளி கிளப்பிய கணவன்!

Webdunia
சனி, 18 மே 2019 (13:47 IST)
கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை தீர்க போய் கள்ளக்காதல் பிரச்சனையில் சிக்கியுள்ளார் போலீஸ் ஒருவர். 
 
களியக்காவிளையை அடுத்த சூரியகோடு என்ற பகுதியில் வசித்து வருபவர் சோமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். 
 
அப்படி இந்த ஆண்டு அவர் ஊருக்கு வந்த போது, சோமன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், சோமனின் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரை ஏற்ற மோகன அய்யர், கணவன் மனைவி இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளார். அப்போது கணவரை எச்சரித்ததோடு, மீண்டும் இது தொடர்ந்தால் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். அதோடு மனைவிக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளார். 
 
இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் வெளிநாடு சென்ற சோமன், போலீசில் புகார் அளித்த மனைவியையும், எச்சரித்த போலீசையும் அசிங்கப்படுத்த நினைத்துள்ளார். 
 
உடனே, தனது மனைவியை சப் இன்ஸ்பெக்டர் அபகரித்துக் கொண்டதாகவும், இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது. 
 
இது வெறும் வதந்தி என தெரிந்ததும், சோமன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்