மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 2013 ஆம் வருடம் இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணம் ஆன நாளில் இருந்தே அப்பெண்ணை மாமியாரும், கணவரும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் கணவரை விட்டு பிரியவும் விவாகரத்து கோரவும் முடிவு செய்தார். இதுபற்றி அறிந்த கணவரும் மாமியாரும் அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்... காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் அபெண்ணின் கணவரிடமும், மாமியாரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.