இந்த வருஷம் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (09:47 IST)
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை நாட்டின் நீர்த்தேவையில் பெரும்பான்மை பகுதியை நிறைவேற்றுகிறது. இந்த தென்மேற்கு பருவக்காற்றால் அரபிக்கடலோர மாநிலங்கள் தொடங்கி மத்திய மாநிலங்கள் வரை மழை பெறுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் “இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும். நீண்ட கால சராசரியான 96 சதவீதமாக இது இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதத்தில் எல் நினோ நிலைகள் உருவாகலாம் என்றும், இதனால் அந்த காலக்கட்டத்தில் அதீத மழை அல்லது குறைவான மழைப்பொழிவு நிகழலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்