அம்பானி மகள் கல்யாணத்துக்கும் எவ்வளவு செலவு தெரியுமா..?

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (12:09 IST)
இந்தியாவில் உள்ள நெம்பர் ஒன் கோடிஸ்வரர் முகேஷ் அம்பானியின் பெயர் உலகில் பரவலாக அறியப்பட்டதுதான். அவரது வானம் தொடும் அண்டிலா வீட்டுக்கு வாயப்பொளக்காதவர்களே இல்லை எனலாம்.
இந்நிலையில் தன் மகள் திருமணத்தை மிகவும் கிரெண்டாக நடத்த திட்டமிட்டார். அதனால் உலகில் உள்ள பிரபலமானவர்களை திருமணத்திற்கு அழைத்துள்ளது இதில் முக்கியமானது.
 
மேலும் உலகில் இதுவரை யாரும் செலவு செய்யாத அளவவில்  பல கோடிகள் செலவழித்து தன் செல்ல மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார். இதில் முக்கியமாக ரூ.450 கோடிகளுக்கு புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்துள்ளார்.
 
பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் இடையே காதல்  உருவானதால் இரு வீட்டாரும் இந்த பரிசுத்தமான காதலுக்கு பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து. நேற்று ஷங்கர் படத்தின் இரட்டிப்பான செலவு போல நிஷாவின் கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.
 
இதில் ஹைலைட் என்னவென்றால் திருமணப் பத்திரிக்கை அச்சடிக்க ஒரு பத்திரிக்கைக்கு 3 லட்சம் அளவுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்