மிகக்குறைந்த வித்தியாசம்தான்.. பீகாரில் ஆட்சி அமைப்பது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

Siva

ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (16:47 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 243 தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.
 
இந்த சூழலில், சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன:
 
ஆட்சி அமைக்க எந்த கூட்டணிக்கு வாய்ப்பு?
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 40 %
இந்தியா கூட்டணி (RJD தலைமையில்) 38.3 %
பிரசாந்த் கிஷோர் (JS) 13.3 %
 
முதலமைச்சர் வேட்பாளர் விருப்பம்:
 
ஆட்சி அமைக்கும் வாய்ப்பில் NDA முன்னிலை வகித்தாலும், முதல்வர் வேட்பாளர் விருப்பத்தில் தேஜஸ்வி யாதவ் (RJD) 36.5% ஆதரவுடன் முதலிடம் பிடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் (23.2%), தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் (15.9%) மற்றும் சிராக் பாஸ்வான் (8.8%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
 
மாநில பிரச்னைகளைத் தீர்க்கும் திறனில், 36.5% பேர் இந்தியா கூட்டணி மீதும், 34.3% பேர் NDA கூட்டணி மீதும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இந்த முடிவுகள் பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதையும், ஆனால் மக்கள் RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விரும்பத்தக்க முதல்வர் வேட்பாளராகக் கருதுவதையும் காட்டுகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்