கூடுதலாக கேட்ட உப்புக்கு பில் போட்டு அதிர வைத்த ஓட்டல்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (14:50 IST)
ஹைதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் கூடுதலாக கேட்ட உப்புக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.


 

 
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ராஜ்பவன் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவினாஷ் சேதி என்பவர் தனது குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். உணவுக்கு முன் எலுமிச்சை சோடாவு ஆர்டர் செய்துள்ளார். அதில் உப்பு குறைவாக இருந்துள்ளது. இதனல் அவர் சிறுது உப்பு சேர்க்கும்படு கேட்டுள்ளார்.
 
அனைவரும் சாப்பிட்ட பின் பில் வந்துள்ளது. பில்லை பார்த்து அவினாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பில்லில் கூடுதலாக வழங்கப்பட்ட உப்புக்கு 1 ரூபாய் கட்டணம் சேர்க்கப்பட்டு இருந்தது. அந்த பில்லை அவர் இணையத்தில் பதிவேற்ற அது வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த் சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அநத ஓட்டல் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
 
இது தவறுதலாக நடந்துவிட்டது. எங்கள் ஓட்டலில் தற்போதுதான் புதிய சாப்ட்வேரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். அதில் ஏற்பட்ட தவறால் உப்புக்காண கட்டணம் சேர்ந்துள்ளது என்றனர்.
 
ஓட்டல் நிர்வாகத்தினர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓட்டல் நிறுவனம் அவினாஷ் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகையை திருப்பித்தர முன்வாந்தது. ஆனால் அவினாஷ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்