சிவசேனா, பாஜகவுக்கு எதிராக போராட்டம் செய்வோம்..ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை

Arun Prasath
வெள்ளி, 22 நவம்பர் 2019 (09:40 IST)
மஹாராஷ்டிராவில் காங்கிரஸூடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றால், பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளை எதிர்ப்போம் என இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்தான இழுப்பறி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத கூட்டணியுடன் ஆட்சி அமைப்பது குறித்தான தீவிர முயற்சியில் உள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்டிராவின் சமஸ்தா இந்து அகாடி அமைப்பின் தலைவர் மிலிந்த் ஏக்போதே “”பாஜகவும், சிவசேனாவும் விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும், இந்த இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முயன்றால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்துள்ளார்.

மேலும், ”சமஸ்தா இந்து அகாடிக்கு பல ஹிந்து அமைப்புகள் ஆதரவாக உள்ளன. கொள்கை ரீதியாக வேறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு இதற்கு மேலும் முயற்சி எடுத்தால், இந்துத்துவா அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து அவர்களை எதிர்க்கும்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்