கீழ் நோக்கி நகர்கிறது தென்மேற்கு பருவமழை.. 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!

Mahendran

திங்கள், 15 ஜூலை 2024 (12:39 IST)
தென்மேற்கு பருவமழை கீழ் நோக்கி நகர்வதாகவும் இதனால் 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தென்மேற்கு பருவமழை காரணமாக மும்பையில் மிக கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை கீழ் நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நகர்கிறது என்றும் இதனால் மேற்கண்ட 4 மாநில கடலோரங்களில் இந்த வாரம் தென்மேற்கு பருவமழை நிலைபெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மேற்கண்ட 4 மாநிலங்களில் வரும் நாட்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்