டெல்லியில் கனமழை: வெப்பத்தில் இருந்து தப்பித்த பொதுமக்கள்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (07:37 IST)
கடந்த சில நாட்களாக டெல்லியில் அதிக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் வெயில் கொளுத்தி வந்தது என்பதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனால் பொதுமக்கள் கடும் அவதி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கனமழை கொட்டியது 
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வெப்பத்திலிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத், நொய்டா ஆகிய நகரங்களில் கனமழை பெய்தது.
 
அதேபோல் டெல்லி மற்றும் அரியானாவில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி மிதமான மழை பெய்து என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்