10 மாதங்களில் 7-வது முறையாக பரோல்.. குர்மீத் ரஹிம் விவகாரத்தில் நீதிமன்றம் கண்டனம்.!

Siva
வெள்ளி, 1 மார்ச் 2024 (06:57 IST)
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குர்மீத் ரஹிம் என்பவருக்கு கடந்த 10 மாதங்களில் 7 முறை பரோல் வழங்கப்பட்டதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அடுத்த முறை பரோல் வழங்கும்போது  நீதிமன்றத்தில் மாநில அரசு அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவை சேர்ந்த தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ரஹிம் என்பவர் தனது ஆசிரமத்தில் இருந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

இந்நிலையில் ஹரியானா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ரஹிமுக்கு அம்மாநில அரசு அடிக்கடி பரோல் கொடுப்பதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக கடந்த 10 மாதங்களில் அவர் 7 முறை பரோலில் வெளியே வந்திருப்பதாகவும் கூறப்பட்டது

இது குறித்து பொதுநல வழக்கு ஒன்று ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அடுத்த முறை பரோல் வழங்கும்போது நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கண்டித்ததோடு இதே போல் இன்னும் எத்தனை பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்