ஓட்டு போட்டால் திரையரங்குகளில் கட்டண சலுகை.. ஹரியானா அரசு அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (10:42 IST)
இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளது என்பதும் மே 13, 20 , 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் ஹரியானாவில் மே 25ஆம் தேதி 10 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
இதன்படி மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட்டு விரலில் உள்ள மையை காண்பித்தால் திரையரங்குகளில் கட்டண சலுகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் திரையரங்கு வளாகத்தில் உள்ள ஹோட்டல்களிலும் ஓட்டு போட்டவர்களுக்கு கட்டண சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு தரும் கட்டண சலுகையை அரசே தந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்