குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (03:13 IST)
குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்து வந்த ஆனந்தி பென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


 


அதனை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவராக இருந்து வந்த விஜய் ரூபானி மாநில முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார். துணை முதல்-மந்திரியாக நிதின் பட்டேல் நியமிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில முதல்வராக விஜய் ரூபானி மாநில முதல்-மந்திரியாககவும், நிதின் பட்டேல் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் குஜராத்தின் பாஜக மாநில தலைவராக ஜிட்டு வகானியை பாஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்