பேருந்தை பழைய இரும்புக்கடையில் போட்டு பேரிச்சம்பழம் வாங்கிய பொது மக்கள்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (02:23 IST)
மதுக்கரை அருகே திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, 12 கிராமங்களில், 8,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.


 


இவர்களின் போக்குவரத்து வசதிக்காக, நான்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இவை குறித்த நேரத்துக்கு இயக்கப்படவில்லை. மேலும், பேருந்துகள் தரமில்லாமல் இருக்கிறது, இதை கண்டித்து, பேருந்தை சிறை பிடித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுதான பேருந்துகள் பழைய இரும்புக்கடைக்கு போகவேண்டியவை என கூறி, பொம்மை பேருந்தை எடைக்கு எடை போட்டு, பேரீச்சம்பழம் வாங்கி, வினியோகம் செய்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக, காவல்துறையினர்  உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
அடுத்த கட்டுரையில்