உடல் முழுவதும் கொப்பளங்கள்; செத்து விழும் மாடுகள்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (12:51 IST)
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு வித்தியாசமான வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் முழுவதும் சின்ன சின்னதாக கட்டிகள் ஏற்பட்டு மாடுகள் உயிரிழந்து வருகின்றன.

ராஜஸ்தானில் ஜலோர், ஜோத்பூர், பாரான், ஸ்ரீ கங்கா நகர், ஜெய் சால்மர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதியில் இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இரு மாநிலங்களிலும் இந்த நோயால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளன.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் மாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்