கேரளாவில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமான ஒருவர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வினீத். டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு பல ஆயிரக்கணக்கான பாலோவர்ஸ் இருந்து வந்துள்ளனர். அவ்வாறாக அவருக்கு பாலோவராக இருந்த பெண் அவருடன் தனியாகவும் செல்போனில் பேசத் தொடங்கியுள்ளார்.
இருவரும் அடிக்கடி வீடியோ கால் பேசிய நிலையில் இளம்பெண்ணை வினீத் அவருக்கு தெரியாமலே ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் டிக்டாக்கில் பிரபலமடைவது எப்படி என சொல்லி தருவதாக இளம்பெண்ணை திருவனந்தபுரம் வர செய்த வினீத், அவரை லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்து சென்று இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை காட்டி, தனக்கு இணங்க மறுத்தால் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் வினீத்தை கைது செய்த போலீஸார் அவரது செல்போனை கைப்பற்றியுள்ளனர். அதில் மேலும் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.