நம்ம குடும்பத்துக்கு நம்மாள கொரோனா வந்துட கூடாது! – தாத்தா, பாட்டி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (16:51 IST)
ராஜஸ்தானில் கொரோனா உறுதி செய்யப்பட்ட முதிய தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியை சேர்ந்த ஹீரலால் பைரவா மற்றும் அவரது மனைவி சாந்திபாய் முதிய தம்பதி தனது 18 வயது பேரன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஹீரலால் பைரவா மற்றும் அவரது மனைவிக்கு ஏப்ரல் 29ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் தங்களால் தனது பேரன் மற்றும் மருமகளுக்கு கொரோனா பரவி விடுமோ என்று அஞ்சிய முதிய தம்பதியினர் வீட்டிலிருந்து வெளியேறி சம்பல் ஓவர் ப்ரிட்ஜ் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்