அழகு சாதனப் பொருட்களின் விளம்பரம் – இனி அடித்து விட முடியாது!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:30 IST)
அழகு சாதன விளம்பரங்கள்

அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களில் பொய்யான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டால் இனி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொட்டை தலையில் முடி வளரவேண்டுமா? கருமையான நிறத்தைப் போக்கி வெண்மையாக ஆக்கவேண்டுமா? உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைக்க வேண்டுமா? இது போன்ற வார்த்தைகளைக் கேட்காமல் நம் நாட்கள் நிறைவடையாது. அப்படி தினமும் 100 முறை பொருட்களை விளம்பரம் செய்து விற்பனை செய்து கொண்டு நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன் படி இனி விளம்பரங்களில் இல்லாத ஒன்றை சொல்லி விற்பனை செய்யக் கூடாது. அப்படி செய்தால் முதல்முறைக்கு 2 ஆண்டு சிறையும் 10 லட்சம் அபராதமும் அடுத்தடுத்த முறைகளில் 5 ஆண்டு சிறையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்