படிக்கட்டே இல்லாத அரசுப் பேருந்து...பொதுமக்கள் அவதி...வைரலாகும் வீடியோ.

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:08 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பேருந்தில் படிகட்டு இல்லாததால் மக்கள்  பாதிப்பு அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அரசின் திட்டங்களுக்கும், அறிவிப்புகளுக்கும் எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றன.

 நேற்று, அந்த மா நிலத்தில், உள்ள முக்கிய சுங்கச்சாவடியின் தடுப்புகளை தகர்த்த மணல் கொள்ளையர்களின் வீடியோ வைரலானது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு அரசுப் பேருந்தில் படிக்கட்டே இல்லாமல் இயங்கி வருகிறது. அதில், பயணிக்கும் பயணிகள் ஆபத்தான முறையில் இறங்கி ஏறுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்