நாக பஞ்சமியில் எருமையாக மாறிய நபர்....வைரலாகும் வீடியோ
சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:07 IST)
நாகபஞ்சமி தினத்தன்று ஒருவர் எருமையாக மாறும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மகாராஞ்சியில் புட்திரம் என்பவர் தன்னை எருமை என்று அழைத்துக் கொள்வதை விரும்புகிறார்.
அதிலும், நாகபஞ்சமி தினத்தன்று எருமையின் ஆவி இந்த நபருக்குள் புகுந்து, அவரை விலங்குகள் உண்ணும், தீவனங்கள், புல், போன்றவற்றை உண்ண வைக்கிறது என அங்குள்ள மக்கள் இவரைப் பற்றி கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் வினோதமாக இருந்தாலும் கடந்த 40 முதல் 45 வருடங்களாக பைன்சாசுரனின் ஆவிதன் மீது வருவதாக புத்திரம் கூறுகிறார்.