குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி!! ஆன்லைனில் மது விற்பனை: அரசின் அதிரடி திட்டம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (08:13 IST)
குடிமகன்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மகாராஷ்டிர அரசு, மதுபானங்களை ஆன்லைன் விற்பனை மூலம் வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
 
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும் முக்கியமாக மகாராஷ்டிராவில் மது குடிப்போர் ஏற்படுத்தும் விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புக்கள் நடைபெறுகின்றன.
 
இதனை குறைக்க மகாராஷ்டிர அரசு ஒரு புதுமையான ஐடியா செய்துள்ளது. அது என்னவென்றால் ஆன்லைன் மூலம் குடிமகன்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே மதுவை நேரடியாக டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
 
இதன் மூலம் விபத்துக்களும் குறையும், அதேபோல் அரசுக்கும் மதுவால் கிடைக்கும் வருமானம் குறையாமல் இருக்கும். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்