அரசு ஊழியர்கள் இனி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணையலாம்! - 58 வருட தடையை நீக்கியது மத்திய அரசு!

Prasanth Karthick
திங்கள், 22 ஜூலை 2024 (11:04 IST)

இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் இணைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏராளமான மத அமைப்புகள் உள்ள நிலையில் இந்துத்துவ அமைப்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. சுதந்திர காலக்கட்டத்திற்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1948ல் காந்தி கொலை வழக்கில் தொடர்புகள் உள்ளதாக் சர்தார் படேலால் தடை செய்யப்பட்டது. பின்னர் நற்பணிகளில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் ஈடுபடும் என உறுதியளித்த நிலையில் தடை நீக்கப்பட்டது.

அதன்பின்னர் 1966ம் ஆண்டில் பசு மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது தொடர்பான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதற்காக அப்போதைய காங்கிரஸ் அரசால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் இணைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 58 ஆண்டுகள் கழித்து இந்த தடையை பிரதமர் மோடியின் கீழ் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி அரசு ஊழியர்களும் ஆர்.எஸ்.எஸ் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட முடியும். இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்