தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே.! மத்திய அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

Senthil Velan

வியாழன், 18 ஜூலை 2024 (14:00 IST)
தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே என்றும் அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்றும்  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது.
 
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
 
இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள 26 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்களை விடுவித்து தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ALSO READ: நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!!
 
தொடர்ந்து பேசிய நீதிபதி தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே என்றும் அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார். மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என்று நீதிபதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்