கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

Senthil Velan
சனி, 25 மே 2024 (14:09 IST)
கூகுள் மேப் உ5தவியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்கள்  காருடன் ஆற்றுக்குள் விழுந்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர்.  அந்த காரில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி உள்ளார்.
 
இந்நிலையில் கோட்டயம் வந்த போது கார் ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது உள்ளே இருந்தவர்கள் நீரில் தத்தளித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ: போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!
 
கடந்த ஆண்டு கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்த மருத்துவர்கள் ஆற்றில் மூழ்கி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்