இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற பகுதியில் உள்ள ஒரு சாமியார் கடந்த சில நாட்களாக பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. இதனால் அந்த சாமியாரை பெண்கள் இருவர் நீண்ட உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அடித்து வெளுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது அந்தச் சாமியார் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இரண்டு பெண்கள் அவரை அடித்து உதைத்ததாக கூறப்பட்டது