வீட்டை இழந்து ரோட்டில் நிற்கும் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி....

புதன், 27 டிசம்பர் 2017 (21:24 IST)
நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா. இவர் கமலிடம் இருந்து விலகிய பின்னர் மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார். இவரது மகள்கள்தான் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. சரிகாவின் தாய் சில மாதங்களுக்கு முன்னர் காலமானார். 
 
தாயார் காலமான பின்னர், இவர்கள் தங்கியிருந்த வீடு டாக்டர் விகாஸ் தாக்கர் என்பவரது கைக்கு சென்றுவிட்டது. இந்த வீட்டை சரிகா சம்பாதித்த பணத்தில் அவரது தாய் வாங்கியதாக கூறப்படுகிறது. 
 
இந்த வீட்டை தனது இறப்புக்குப் பின்னர் தனது மகளுக்கு என்று எழுதி வைத்து இருப்பதாக கூறப்பட்டாலும், உயிலில் டாக்டர் விகாஸ்-க்கு எழுதி வைத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
இதனால், மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில், பானு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இந்த வீட்டை அவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும் ஜூஹூ பீச்சில் உள்ள ஒரு வீடும் அவரது கையை விட்டு சென்றுள்ளது. 
 
இந்நிலையில், சரிகாவின் தோழி நுஸ்ரத். அமிர்கானின் சகோதரி நுஸ்ரத். எனவே, அவர் வழியாக அமிர்கானின் உதவியை சரிகா நாடியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது தங்குவதற்கு வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இவரது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனியாக மும்பையில் வசித்து வருகிறார். இளைய மகள் அக்ஷரா ஹாசன் அவ்வப்போது தனது தாயுடனும், சென்னையில் தனது தந்தையுடனும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்