விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

Senthil Velan
வியாழன், 4 ஜூலை 2024 (13:48 IST)
விண்வெளிக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
 
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த திட்டம் ₹9 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
 
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விமானிகளின் பெயர்களை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் வெளியிட்டார்.  இதனிடையே, விண்வெளிப் பயணத்தில் பிரதமர் மோடியும் இணையக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார்.
 
தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடி, விண்வெளிக்குச் செல்வதற்கு முன், மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ALSO READ: சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!
 
இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மணிப்பூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை அங்கு சொல்லாதது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்