பொருளாதாரத்தில் பெரும் சரிவு: புள்ளி விவரங்கள் கூறுவது என்ன??

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (08:55 IST)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 வருடங்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கணக்கெடுப்பு முடிவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும், கடந்த ஆறு வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது பெரும் சரிவாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பொருளாதார சரிவுக்கு காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், இந்த பொருளாதார சரிவுக்கு பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் எனவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களாலேயே இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், மத்திய அரசின் தவறான நிதிக்கொள்கை காரணமாக நாட்டின் மொத்த பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது எனவும், நாட்டில் தொழில் துறைகளின் மந்தநிலையாலும் வேலைவாய்ப்பின்மையாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்