குழந்தையை கொன்று விட்டு தாயை கற்பழித்த கொடூர கும்பல் - டெல்லியில் அதிர்ச்சி..

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (12:31 IST)
ஷேர் ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு இளம்பெண், இறந்து போன தனது 9 வயது குழந்தையுடன், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 29ம் தேதி இரவு, 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், தனது 9 மாத குழந்தையுடன், தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது, அந்த ஆட்டோ ஒட்டோவில் அந்த ஓட்டுனரின் நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர்.
 
அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவரின் கையில் இருந்த குழந்தையும் அழ தொடங்கியது. எனவே, எரிச்சலடைந்த அந்த மூவரும் ஓடும் ஆட்டோவில் இருந்து குழந்தையை தூக்கி வீசினர். இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது.
 
அதன் பின் அந்த பெண்ணை அவர்கள் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நள்ளிரவு 9 மணியளவில் யாரும் இல்லாத சாலையில் விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின் அந்த பெண், சாலையில் வீசப்பட்ட குழந்தையை தேடிக்கண்டுபிடித்து விடியும் வரை அந்த சாலையிலேயே இருந்துள்ளார். குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லாததால் பதறிப்போன அவர், அதிகாலை மெட்ரோ ரயிலில் ஏறி ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால், அதை நம்ப மறுத்த அப்பெண் வேறொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கும் மருத்துவர்கள் அதையே கூற கண்ணீர் விட்டு கதறிய அப்பெண், குழந்தையோடு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்