அவர அமைதியா இருக்க சொல்லுங்க: திவாகரனிடம் சவுண்ட் விட்ட எடப்பாடி!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (11:51 IST)
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் தினகரன் அணிக்கும் இடையே புகைச்சல் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக அவரை சந்தித்து வரும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


 
 
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறையில் இருந்த தினகரன் ஜாமீனில் வெளியே வந்ததும் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாகியது. தான் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்ததும் ஆட்சியாளர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
 
இதனையடுத்து மீண்டும் அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தி அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்ததாக அறிவித்தது இன்னமும் தொடர்கிறது அவர் ஒதுங்கி இருப்பது நல்லது என மீண்டும் கறாராக கூறினர்.
 
ஆனால் தினகரன் தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என மீண்டும் மீண்டும் தெரிவித்தார். இதனையடுத்து எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்கும் பணியில் தீவிரமாக இறங்கிய தினகரன் தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தனக்கு ஆதரவாக வைத்துள்ளார்.
 
இந்த எம்எல்ஏக்கள் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொடுக்க முயல்வதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அமைச்சர்களை விமர்சிக்கின்றனர்.
 
இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து ஆலோசனை நடத்தி வந்தார். அந்த நேரத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் முதல்வருக்கு போன் செய்ததாகவும் அவரிடம் தினகரனை அமைதியாக இருக்க சொன்னதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
திவாகரனிடம் இருந்து போன் வந்துள்ளதாக முதல்வரின் உதவியாளர் அவரிடம் வந்து கொடுக்க போனை வாங்கிக்கொண்டு தனியறைக்குள் சென்றுள்ளார். அப்போது திவாகரனிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அவரை அமைதியா இருக்கச் சொல்லுங்க, பிரச்னை பண்ணினா எனக்கு எதுவும் இழப்பு இல்லை என கொஞ்சம் சத்தமாகவே கூறியுள்ளார் என தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்