பெட்ரோல் விற்கும் விலையில்... டேங்கர் லாரியோடு பெட்ரோல் அபேஸ்!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (18:15 IST)
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக பெரோல் திருடி வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பல நாட்களாக நூதன முறையில் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது. இந்த பெட்ரோல் திருடும் கும்பலை போலீஸார் பல நாட்களாக தேடி வந்துள்ளனர். 
 
இந்நிலையில், இன்று கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீஸார் மேற்கொண்ட அதிரசி சோதனையில், டேங்கர் லாரியின் மேல்பகுதியிலிருந்து பிளாஸ்டிக் டியூப் மூலம் ரகசியமாக பெட்ரோல் திருடி கொண்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
 
பின்னர் உடனடியாக விரைந்து அந்த கும்பலை கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கிவைத்திருந்த 14,000 லிட்டர் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்