சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 ஆம் தேதி வரைமுரையின்றி நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கும் முக்கியமானத் தீர்ப்பை அறிவித்தது. அதில் ‘சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்தும் வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் முன்பு கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையாக இந்த தடையை நீக்க வேண்டுமெனவும் மேலும் கனிமவளப் பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் விநியோகித்து வந்த 4100 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.