இன்று முதல் இலவச தரிசன டிக்கெட்: திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (07:47 IST)
கொரன வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே 
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்திய தளர்வூகள் காரணமாக கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்
 
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை இலவச தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வினியோகம் செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது 

இதனை அடுத்து ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வினியோகம் சற்றுமுன் தொடங்கியது. இந்த இலவச டிக்கெட்டுக்களை பெறும் பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பதால் இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர் 
 
இலவச தரிசனம் செய்பவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கோவிலுக்குள் செல்வதற்கு முன்னர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்