புனிதமான காவியை பெரியார் சிலை மீது பூசுவதா? பாஜக பிரமுகர் டுவீட்

ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (10:58 IST)
புனிதமான காவியை பெரியார் சிலை மீது பூசுவதா?
கடந்த சில மாதங்களாக பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. பெரியார் சிலை மீது காவி வண்ணம் பூசுபவர்கள் பெரியாருக்கு எதிரானவர்களா?  அல்லது பெரியாரின் ஆதரவாளர்களே காவி வண்ணம் பூசி பிரச்சனையை கிளப்புகிறார்களா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்
 
இந்த நிலையில் கோவை, கன்னியாகுமரி உள்பட ஒருசில இடங்களில் ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்டதன் பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது மீண்டும் திருச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருச்சி இனாம் குளத்தூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக காவி சாயம் பூசி சென்று உள்ளதை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் பூசியதற்கு திமுக, அதிமுக தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
இது தவறு. அவசியமற்றது.நம் சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை கருத்தினால் மட்டுமே வெல்ல முயற்சிக்க வேண்டும். ஈ.வெ.ரா, நம் கொள்கைகளுக்கு எதிரானவர் தான். அநாகரீகமான இது போன்ற செயல்களை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவி  புனிதமானது. அதை வைத்து  அநாகரீகம் செய்வது முற்றிலும் தவறு. இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது உடன் செய்யப்பட வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்