தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இருப்பினும் பொதுமக்கள் சமூக விலகலை சரியாக கடைபிடிக்கவில்லை என்றும் அடுத்து நீட்டிக்கப்படும் ஊரடங்கில் மிகக் கடுமையாக ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்பூரில் ஏற்கனவே 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் அவர்கள் ஆம்பூரில் அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே வங்கிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் முழுநேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை சரியாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஆம்பூர் மாவட்டம் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது