கேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (09:33 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அம்மாநில மக்களின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தற்போது இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் கேரள மக்கள் வெள்ளத்தால் பாஸ்போர்ட்டை இழந்திருந்தால் அதற்கு மாற்றாக, புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இதேபோல் மற்ற ஆவணங்களையும் இலவசமாக வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்