சிறு சிறு தீவுகளாய் மாறி வரும் கேரளா: இந்நிலை எப்போது மாறும்?

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (10:25 IST)
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. 
ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகலூக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும், எத்தனை முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், திறந்துவிடப்பட்ட நீரால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதனால் கேரள மாநிலம் நீர் சூழப்பட்டு சிறு சிறு தீவுகள் போன்று காணப்படுகிறது
 
கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையை சரிசெய்ய ராணுவ உதவியை முதலமைச்சர் பினராயி விஜயன் நாடியுள்ளார். மேலும், அவர் பல இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். 
 
மழை வரும் ஆகஸ்ட் 15 வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மழையின் தாக்கம் சற்று குறைந்த பின்னரே கேரளாவில் நிலை சரியாகும் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்