கேரளாவிற்கு திமுக சார்பாக ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின் அறிவிப்பு!

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (16:18 IST)
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. 
ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகலூக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 
 
இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்கலீல் தங்கி வருகின்ரனர்.
 
இவர்களுக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர் அந்த வகையில் திமுக சார்பாக ரூ.1 கோடி உதவி அளிக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ரூ.1 கோடி திமுக அறக்கட்டளை சார்பில் நிதி உதவியாக அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்