மாணவிகளுக்கு இலவச சைக்கிள், இலவச ஸ்கூட்டி: இமாச்சல பிரதேசத்தில் பாஜக வாக்குறுதி!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (12:02 IST)
பொது மக்களுக்கு இலவசங்கள் அளிக்கக்கூடாது என சமீபத்தில் பிரதமர் மோடி பேசிய நிலையில் இமாச்சல பிரதேச தேர்தல் அறிக்கையில் பாஜக இலவச சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில்  நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தற்போது உச்சகட்டத்தை தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது
 
 ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும்  பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக பேசிய நிலையில் தற்போது அவரது கட்சியை இலவசங்களை ஆதரிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்