5 நாட்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (08:53 IST)
டெல்லியில் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு பேருந்துகளில் இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்யலாம் என டெல்லி முதலமச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்


 


டெல்லியில் மாசு அளவு அதிகரித்ததன் காரணமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே டெல்லியில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமுறை வரும் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதை அடுத்து டெல்லி மக்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 13ஆம் தேதி திங்கள் முதல் 17ஆம் தேதி வெள்ளிவரை ஐந்து நாட்கள் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்