உலகில் மாசால் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்றும் மாசு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காற்று மாசு கடுமையாக இருந்ததால் நகரமே புகைமூட்டமாக இருந்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.