உள்துறை அமைச்சகத்தின் இணையதளமும் முடக்கம். என்ன நடக்கின்றது நாட்டில்?

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (18:59 IST)
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு அதில் சீன எழுத்துக்கள் இருந்ததாக வெளிவந்த செய்தியை சற்றுமுன்னர் பார்த்தோம். இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டதை அடுத்து உள்துறை அமைச்சகத்தின் இணையதளமும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

அதுமட்டுமின்றி பாதுகாப்புத் துறை, உள்துறை, தொழிலாளர் நலத் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை இணையதளங்கள் ஆகிய நான்கு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

முடக்கப்பட்ட அனைத்து இணையதளங்களிலும் சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்