ரூ.99க்கு விமான டிக்கெட்: உள்ளூர் பயணிகளுக்கு அதிரடி சலுகை

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (19:24 IST)
ஏர் ஏசியா உள்நாட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.99 முதல் தொடங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.


 

 
குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏர் ஏசியா விமான நிறுவனம் தற்போது புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
 
ரூ.99 சலுகை கட்டணத்தில் உள்நாட்டு பயணம் மற்றும் ரூ.444 சலுகை கட்டணத்தில் வெளிநாட்டுகளுக்கு பயணம் செய்யலாம். இந்த சலுகையை பெற இன்று இரவு முதல் 19ஆம் தேதி வரையில் மொபைல் ஆப் மற்றும் ஏர் ஏசியா இணையத்தில் முன்பதிவு செய்யலாம். 
 
இந்த கட்டணச் சலுகையில் பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுதில்லி, கோவா ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யலாம். 
 
ஏர் ஏசியா பெர்ஹாட், ஏர்ஏசியா எக்ஸ் பெர்ஹாட், இந்தோனேசியா ஏர்ஏசியா எக்ஸ், இந்தோனேசியா ஏர்ஏசியா மற்றும் தாய் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். 
 
ஆண்டு இறுதி கொண்டாட்டமாக ஏர் ஏசியாவுடன் இணைந்துள்ள பிரதான மொபைல் வாலட்டான 'மொபிக்கிவிக்' ஆப் மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது கட்டணத்தில் 1000 ரூபாய் சலுகைளை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்