ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

Siva

சனி, 2 நவம்பர் 2024 (11:42 IST)
ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில், சனிக்கிழமை அன்று தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரும் இடையே திடீர் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, "கான்யார் பகுதியில் சில தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில்  தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  பாதுகாப்புப் படையினரும் அதற்குத் தக்கவாறு பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை தீவிரமாக நடந்தது.

தற்போது துப்பாக்கிச் சண்டை இன்னும் நீடிக்கிறது. இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை இல்லை" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்