இன்று முதல் வங்கிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை! மொபைல் வங்கி சேவை செயல்படும்..!

Mahendran
சனி, 13 ஜனவரி 2024 (09:37 IST)
இன்று முதல் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் அது வரை மொபைல் வங்கி சேவையை பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
 இன்று இரண்டாவது சனி மற்றும் நாளை ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்ற நிலையில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15,  மாட்டுப் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 16 மற்றும் காணும் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 17 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை ஆகும்.

ALSO READ: நாங்கள் ராமருக்கு எதிரியில்லை.. அயோத்தி செல்வேன்: கர்நாடக முதல்வர் சித்தராமையா ..!
 
எனவே இன்று முதல் அதாவது ஜனவரி 13 முதல்  ஜனவரி 17ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இன்டர்நெட் வாங்கி சேவை, மொபைல் வாங்கி சேவை செயல்படும் என்பதால்  இந்த ஐந்து நாட்களும் பொது மக்கள் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் அனைத்து ஏடிஎம் மூலம் வழக்கம் போல் செயல்படும் என்றும் போதுமான பணம் ஏடிஎம்மில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்