பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடத்தப்படும் அல்வா வழங்கும் நிகழ்ச்சி, மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் இன்று நடந்தது.
2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதியன்று பாராளுமனறத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கை அச்சிட துவங்கும் முன், நிதியமைச்சகத்தில் அல்வா வழங்கும் விழா நடத்தப்படும். ஒரு நல்ல விஷயம் துவங்கும் முன் இனிப்பு வழங்கி துவக்குவது இந்திய கலாச்சாரம் என்ற முறையில், இவ்வாறு அல்வா வழங்கும் விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர், பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் அல்வா வழங்குவார். அந்த வகையில் நிர்மலா சீதாராமன் பணியாளர் அனைவருக்கும் அல்வா வழங்கினார்.
மேலும் 100 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.