அந்த பக்கம் விமானம் ஓட்டி போனா அவ்வளவுதான் – பதட்டத்தில் இந்தியா

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (20:27 IST)
ஈரான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க வேண்டாம் என இந்தியா வான்வழிபோக்குவரத்து இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவி ஆள் இல்லாத விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் அமெரிக்கா ஈரான் மற்றும் அதன் தலைநகர் டெஹ்ரான் பக்கமாக எந்த அமெரிக்க விமானங்களும் பறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. உளவு விமானம் என ஈரான் தவறாக அதை சுட்டுவிட கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவும் ஈரான் பகுதிகளில் இந்திய பயணிகள் விமானம் பறக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று வான்வெளி பாதையை உருவாக்கவும் தயாராகியுள்ளது இந்திய விமானபோக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்