ரஜினி, தனுஷ் வரிசையில் ப்ரதீப்… பாராட்டு மழைப் பொழிந்த நாகார்ஜுனா!

vinoth

புதன், 15 அக்டோபர் 2025 (10:00 IST)
இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால் தெலுங்கிலும் இந்த படம் பெரியளவில் ரிலீஸாகிறது. இதையடுத்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் ப்ரதீப். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மூத்த நடிகர் நாகார்ஜுனா ப்ரதீப்பை வாழ்த்திப் பேசியுள்ளார்.

அதில் “பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒல்லியாக ஒருவர் சினிமாவில் அறிமுகமாகி அதன் விதிகளை மாற்றினார், அவர் ரஜினி. அடுத்த அதே போல இன்னொருவர் அறிமுகமாகி அவர் சில விதிகளை மாற்றினார், அவர் பெயர் தனுஷ். அவர்கள் இருவரிடமும் இருந்ததை உங்களிடமும் நான் காண்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்