நிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.