இந்தியாவில் 5 வது கட்டமாக வரும் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் குணம்பெற்றுள்ளனர். மக்களைக் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரொனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கனெவே கோரிய ரூ.3000 கோடி தேவை எனவும் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.