மணிப்பூரில் இணையதள சேவைக்கு தடை நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (20:19 IST)
மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களாகத் தொடர்ந்து  இரு பிரிவினருக்கு இடையே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்  இணையதள சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில்  இரு பிரிவினருக்கு இடையே  கடந்த மாதம் 3 ஆம் தேதி கலவரம் மூண்டது. இக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், 50 நாட்களுக்கு மேலாக  நீடித்து வருகிறது.

இந்தக் கலவரத்தில்  100க்கும் மேற்பட்ட  மக்கள் உயிரிழந்துள்ளதாகவும்  நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில்  எதிர்க்கட்சியான காங்கிரஸ்  மத்திய பாஜக அரசை குறை கூறி வரும் நிலையில், இன்று காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 10 முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளன.

இந்த நிலையில்,  மணிப்பூரில் மோதலை தூண்டும் வகையில் வதந்தி பரப்புவதை தடுக்கும் வகையில்  கடந்த மாதம் 3 ஆம் தேதி அங்கு இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.  இத்தடை  நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் 25 ஆம் தேதி வரை இணையதளத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகரம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்